வணக்கம்
பன்னெடுங்கால வரலாற்றை உடையன இந்திய இலக்கியங்கள். காலந்தோறும் பல்வேறுவகையான இலக்கிய வகைமைகளும் அது சார்ந்த இலக்கிய கோட்பாடுகளும், புதுத்திறனாய்வு முறைகளும் உருவாகிக்கொண்டு வருகின்றன. இச்சூழலில், பரந்துபட்ட இந்திய இலக்கியங்களை கால, தேச, வர்தமானங்களைக் கடந்து ஒருங்கே ஆராயவும், இந்திய இலக்கியங்களை உலகளவில் முன்னெடுத்துச் செல்லும் நோக்கிலும் International Research Journal of Indian Literature என்கிற இந்திய இலக்கிய ஆய்வுகளுக்கான பன்னாட்டு ஆய்விதழைத் துவக்கியுள்ளோம்.
இன்றைய காலனிய, பின்காலனியச் சூழலில் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் இலக்கிய வளமைகளையும் அவற்றின் தனிப்பெறும் சிறப்புகளையும் சர்வதேச அரங்கில் முன்மொழிய வேண்டியதன் அவசியம் மட்டுமல்லாது, அதன் உலகளாவிய சிந்தனையோட்டங்களையும் கோட்பாட்டு உள்ளடக்கங்களையும் அடையாளப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. காலம், இடம், மொழி, இனம், மதம், கலாச்சாரம், பண்பாடு என அனைத்து நிலைகளிலும் வேறுபட்டுக் காணப்படும் இந்திய மண்ணில் இலக்கியங்களும், வேறுபட்ட சூழலைத் தன்னுள் தகவமைத்துக் கொண்டுள்ளன. உலகளாவிய அளவில் அதன் தனித்தன்மைகளை அடையாங்காணுவதும், அடையாளப்படுத்துவதும், பிற உலக இலக்கியங்களோடு இணைத்துப் பாா்க்கவேண்டியதுமான பணிகளை ஒருங்கே செய்வதற்கான ஆய்வுக் களனாக இவ்விதழ் அமைகின்றது.
இந்திய இலக்கியச் சிந்தனைகளையும், மொழி, பண்பாடு சாா்ந்த அதன் தனித்துவமிக்க கூறுகளையும் வெளிப்படுத்துவதோடு, கீழை, மேலை இலக்கியக் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் உட்கொண்டு நிகழ்த்தப்பெறும் ஆய்வுத் திட்டங்களுக்கும், ஆய்வுகளுக்கும் இவ்விதழ் ஊக்கமளிக்கிறது. இந்திய இலக்கிய ஆய்வுச் சிந்தனை மரபில் தனிமொழி இலக்கிய ஆய்வுக்களனாக மட்டும் அமையாமல் ஒட்டுமொத்த இந்திய இலக்கிய ஆய்வுகளை ஒருசேரக் கொணரும் வண்ணம் கருத்தரங்குகள், ஆய்வரங்குகள், பயிலரங்குகள் நடத்தி அதன்வழி பரந்துபட்ட ஆய்வுச் சிந்தனைகளை வளர்த்தெடுக்கவும் இவ்விதழ் விழைகின்றது.
International Research Journal of Indian Literature (இந்திய இலக்கியங்களுக்கான பன்னாட்டு ஆய்விதழ்) அரையாண்டிற்கொருமுறை இணைய இதழாக வெளிவரவிருக்கின்றது. உலகுதழுவிய அளவில் இந்திய இலக்கியங்களையும், அதன் போக்குகளையும், உலகளாவிய அதன் தாக்கத்தையும், அறிவாராய்ச்சிக்குட்படுத்தும் ஆய்வறிஞர்களுக்கு ஒரு சிறந்தக் களமாக இவ்விதழ் அமையும். இந்தியச் சிந்தனா மரபிலும், மொழி, சமய, பண்பாட்டு வெளிகளிலும், அரசியல், அறிவியல் நிலைக்களன்களிலும் அன்றுதொட்டு இன்றுவரை ஏராளமான ஆய்வுக்களன்கள் இனங்காணப்படாமலும், ஆய்வுக்கு உட்படுத்தாமலும் காணப்படுகின்றன. இந்திய இலக்கியங்களை பாரிய நிலையில் அடையாளப்படுத்துவதும், அதன் இலக்கிய போக்குகளை அடையாளங்காண்பதும் தற்காலத் தேவையாகவுள்ளது. இந்திய இலக்கியங்களின் மொழிதல் கோட்பாடுகளை இந்திய மொழிகளுக்கூடாக ஆய்வதும், அவற்றை உலகளாவிய இலக்கிய மரபுகளோடு ஒப்பிட்டு ஆராய்வதன் மூலமும் இந்திய இலக்கிய வரலாற்றின் அடியாழங்களை சரியாக இனங்காணவியலும். இத்தகைய ஆய்வு முயற்சிகளுக்கு இவ்விதழ் ஊக்கமளிக்கின்றது.
கல்விப்புலங்களில் செயலாற்றுகின்ற ஆய்வூக்கமும், தமிழாய்வில் அர்ப்பணிப்புணர்வும் உள்ள பேராசிரியர்கள் International Research Journal of Indian Literature (இந்திய இலக்கியங்களுக்கான பன்னாட்டு ஆய்விதழ்) ஆய்விதழில் ஆசிரியர் குழுவில் சேர வரவேற்கப்படுகின்றனர். பேராசிரியப்பெருமக்கள் இவ்விதழில் இணைந்து செயலாற்ற விழைந்தீராயின், தங்களின் மேலான ஒப்புதலைத் தந்துதவ வேண்டுகிறோம். தங்களின் பதவி, பணியாற்றும் கல்வி நிறுவனம், மேற்கொண்டுள்ள ஆய்வுப்பணிகள், நிறுவனம் சார்ந்த தங்களின் மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விபரங்களை umaranib2020@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி உதவவும்.
நன்றி
இவண்
இந்திய இலக்கியங்களுக் கான
பன்னாட்டு ஆய்விதழ்
International Research Journal of Indian Literature
(ISSN : 2583-5572)
Contact Us
Reach out to us for any inquiries or feedback
info
Irjiljournal@gmail.com
Irjiljournal@gmail.com
IRJIL Journal
No. 8, Mariammal Nagar,
Achipatti (Post), Pollachi-642002,
Coimbatore, Tamil Nadu, India.
Email : Irjiljournal@gmail.com
Phone : +91 9965148965
Follow us for more Updates
This work is licensed under a